எதிர் காலத்திற்கான அக்யூரேட் நியோ-2 நவீன வால்வால் மற்றொரு உயிர்காக்கும் டிஏவிஐ சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள், அரிதான பைகஸ்பிட் வால்வைக் கொண்ட நோயாளிக்கு ‘அக்யூரேட் நியோ 2‘ என்ற எதிர்காலத்திற்கான நவீன வால்வைப் பயன்படுத்தி மற்றொரு உயிர்காக்கும் டிஏவிஐ சிகிச்சை செயல்முறையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இது குறித்து மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர் செங்கோட்டுவேலு  கூறியதாவது: கமலா (67) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெண் நோயாளி ஒருவருக்கு கடுமையான பெருநாடி வால்வு ஸ்டெனோசிஸ் குறைபாடு இருந்தது. இதன் விளைவாக இதய பம்ப் செயல்பாடு 30 சதவீதம் வரை குறைந்தது. அப்போலோ  மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டார். அவரது நிலையை மதிப்பீடு செய்து பகுப்பாய்வு செய்த பிறகு, மருத்துவக் குழுவினர், தேர்ந்தெடுக்கப்பட்ட டிஏவிஐ சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டனர். அந்த நோயாளிக்கு பைகஸ்பைட் பெருநாடி வால்வு குறைபாடு இருந்ததால் சிறப்பு பிரிவில் வகைப்படுத்தப்பட்டு இருந்தார்.

அதாவது பிறப்பால் இரண்டு கிளைகள் மட்டுமே இருப்பது பைகஸ்பிட் குறைபாடு எனப்படும். சராசரி சாதாரண நபருக்கு மூன்று கிளைகள் இருக்கும். இந்த குறைபாடு காரணமாக பல ஆண்டுகளாக அவருக்கு பெருநாடி வால்வு கடுமையாக குறுகலாக அமைந்தது. புதிய வால்வு ஸ்வீடனில் மேம்பட்ட பயிற்சியை பெற்றதால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அக்யூரேட் நியோ 2 வால்வைக் கொண்டு டிஏவிஐ சிகிச்சை அளிக்கப்பட்டது. வால்வின் இருமுனைத் தன்மை கொண்டது. இந்த சிகிச்சை செயல்முறை வெற்றிகரமாக அமைந்ததுடன் அந்த நோயாளி விரைந்து குணம் அடைந்து வீடு திரும்பினார்.

மேலும் புதிய வால்வு இயல்பாக சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது, இதயச் செயல்பாட்டில் உடனடியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டோம். அக்யுரேட் நியோ 2 வால்வு சிறந்த மற்றும் நீண்ட கால ஹீமோடைனமிக் செயல்பாடு, நீடித்த தன்மை மற்றும் எதிர்காலத் தேவை ஆகியவற்றை மனதில் கொண்டு சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிக நோயாளிகளுக்கு பயனளிக்கும். குறிப்பாக கடுமையான பெருநாடி ஸ்டெனோசிஸ் உள்ள இளம் நோயாளிகளுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். புதிய அம்சங்களுடன் கூடிய பல புதிய வால்வுகள் கிடைப்பதால், குறிப்பிட்ட நோயாளிக்கு, குறிப்பிட்ட தேவைக்கு மிகவும் பொருத்தமான வால்வை எளிதில் தேர்வு செய்ய முடியும். இவ்வாறு டாக்டர் செங்குட்டுவேலு கூறினார்.

Related Stories: