மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் லேசான  மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் - 3, சோலையாறு, பந்தலூர், ஹாரிசன் எஸ்டேட் , செருமுள்ளியில் தலா -2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று வடக்கு ஆந்திர கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 15, 16ல் மன்னார் வளைகுடா, தென் தமிழக கரையோரத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: