சித்தூரில் சிக்னலை கண்காணித்து போலீசார் அதிரடி திருட்டு போன வழக்குகளில் 300 செல்போன்கள் மீட்பு-20 பேர் கைது செய்யப்பட்டதாக எஸ்பி தகவல்

சித்தூர் : சித்தூரில் திருட்டு போன வழக்குகளில் 300 செல்போன்கள் சிக்னலை கண்காணித்து மீட்ட போலீசார் 20 பேரை அதிரடியாக கைது செய்தனர்.சித்தூரில் நேற்று எஸ்பி ரிஷாந்த்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் திருடு போனதாக புகார்கள் வந்தன. இதனை அடுத்து சித்தூர் நகர டிஎஸ்பி சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்து செல்போன் திருட்டு வழக்கில் தனி கவனம் செலுத்தி திருடர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி சித்தூர் முதலாவது காவல் நிலையத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2வது காவல் நிலையத்தில் 5 பேர், தாலுகா காவல் நிலையத்தில் 7 பேர், நகரி காவல் நிலையத்தில் ஒருவர், பலமனேர் காவல் நிலையத்தில் ஒருவர், தவனம் பள்ளி காவல் நிலையத்தில் ஒருவர் என மொத்தம் சித்தூர் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களில் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 300 செல்போன்களின் மதிப்பு ₹30 லட்சம். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் அனைத்தும் உரியவர்களிடம் வழங்கப்பட உள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட  20 பேரிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் இவர்கள் யார் யாருக்கு செல்போன் விற்பனை செய்துள்ளார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறோம்.தனிப்படை போலீசார் செல்போன் இருக்கும் சிக்னலை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு, செல்போன் வைத்திருந்தவர்களிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அதில் ஏராளமானோர் எங்களுக்கு சாலையில் போன் கிடைத்ததாகவும், சிலர் மலிவுவிலையில் வாங்கியதாகவும், சிலர் வெளியூரிலிருந்து நபர்கள் எங்கள் ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் செல்போன் வாங்கிக் கொண்டு எங்களுக்கு பணம் கொடுங்கள் என தெரிவித்ததாகவும் தெரிவித்தனர்.

அவ்வாறு தெரிந்தவர்களின் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. செல்போன் திருடியவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன் இழந்தவர்களுக்கு அந்தந்த காவல் நிலையத்திற்கு சென்று அவர்களின் விவரங்களை தெரிவித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது நகர டிஎஸ்பி சுதாகர் மற்றும் ஏராளமான போலீசார் உடனிருந்தனர்.

Related Stories: