குஜராத் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மீது தாக்குதல்: மாஜி அமைச்சர் மீது குற்றச்சாட்டு

அகமதாபாத்: குஜராத்தின் வட்கம் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ (காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்) ஜிக்னேஷ் மேவானி, அகமதாபாத் அடுத்த வஸ்த்ரலில் உள்ள நர்மதா அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அப்போது ஜிக்னேஷ் மேவானியை மர்ம கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜிக்னேஷ் மேவானி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முன்னாள் உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜாவின் குண்டர்கள் என் மீது தாக்குதல்களை நடத்தினர். பிரதீப்சிங் ஜடேஜாவின் ஆதரவாளரான லாபு தேசாய் உள்ளிட்டோர் தாக்கினர். காவல்துறை முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மூலம் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்றிரவு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தனது சொந்த பாதுகாப்பிற்கு கெஜ்ரிவால் பொறுப்பேற்க வேண்டும்  என்று உறுதிமொழியை வாங்கி வைத்துக் கொண்ட போலீசார், அதன்பின் அவரை  விடுவித்தனர். முதல்வரை போலீசார் தடுத்து நிறுத்தியதை ஆம் ஆத்மி கட்சி கண்டித்துள்ளது.

Related Stories: