விதிக்கு முரணாக தனியார் மருத்துவமனைக்கு சான்று வழங்கியதாக குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டத்தில் தனியார்  மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு விதிகளுக்கு முரணாக தகுதி சான்றிதழ் வாங்கியதற்காக எழுந்த புகார் தொடர்பாக முன்னாள் சுகாதார துறை விஜயபாஸ்கர் மற்றும் அந்த மருத்துவ கல்லூரி தொடர்புடைய இடங்களில் லஞ்சம் ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்புகள் தொடங்குவதற்கு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை செயல் படுவதாக போலியாக சான்றிதழ் வழங்கியது தான் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றசாட்டு. முதல் தகவல் அறிக்கையில் விஜயபாஸ்கர், மருத்துவ கல்லூரி தாளாளர் கணேஷ், கல்லூரி டீன் சீனிவாசன் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கிய குழுவில் இருந்த மருத்துவர்கள் பாலாஜிநாதன், மனோகர், சுஜாத்தா, மற்றும் வசந்தகுமார் ஆகியோர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

இந்த மருத்துவ கல்லூரிக்கு சான்றிதழ் அளிப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டில் பார்வையிட்ட குழுவினர் ரத்த வாங்கி, அறுவை சிகிச்சை அரங்கங்கள் உள்ளிட்ட அனைத்தும் வசதிகள் இருப்பதாக அறிக்கை அளித்தனர். அனால் இதையே காலகட்டத்தில் மருத்துவமனை கட்டிடத்தை கட்டுவதற்காக அனுமதி கோராப்பட்டது தெரியவந்ததாகவும், அடிப்படை வசதிகள் இழைத்தபோதே சான்றிதழ் அளிக்கப்பட்டுருப்பது உறுதி செய்யப்பட்டுருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. லஞ்சம் ஒழிப்பு துறை கடந்த நவம்பரில் நடத்திய திடீர் ஆய்வுவில் மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்பது தெரியவந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மருத்துவ கல்லூரியை பார்வையிட மருத்துவர்களை போலியான சான்றிதழ் வழங்க அப்போதிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தூண்டியதாக லஞ்சம் ஒழிப்பு துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால் போலியாக சான்றிதழ் வாங்கியதற்காக விஜயபாஸ்கர்க்கு கல்லூரி தாளாளர் கணேஷ் லஞ்சம் கொடுத்ததாக நம்ப கரணம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டு தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: