செவ்வாழை கன்றுகள் விற்பனை அமோகம்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகே செவ்வாழை கன்றுகளை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களிடம் இப்பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான அளவில் வாங்கி செல்கிறார்கள்.விவசாயிகள் மொத்தமாக செவ்வாழை கன்றுகள் தேவைப்படுவோர் வியாபாரிகளிடம் முன் பணம் கொடுத்தால் சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு கொண்டுவந்து தருவதாக கூறுகிறார்கள்.

அவர்கள் கூறுகையில் ஒரு வாழைக்கும், மறு வாழைக்கும் குறைந்தபட்சம் 7 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அதுவே செவ்வாழையாக இருந்தால் 5 அடி இடைவெளி போதும் என்று கூறுகிறார்கள். வாழையை பதிக்கும்போது சரியான முறையில் இயற்கை உரம் போட வேண்டும் என்றும் மேலும் வியாபாரிகள் கூறும் போது வாழைக்கு இடைவெளி என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வண்டி ஓட வாழை நடவு செய்ய என்று கூறியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

Related Stories: