கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நேற்றுமுன்தினம் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி பேருராட்சி, 15வது வார்டான மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் காசி (58). இவரது மனைவி முனியம்மாள் (55). இங்கு இருவரும் மகனுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இங்குள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதற்காக நேற்றுமுன்தினம் காலை காசி குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றிருந்தனர்.

பின்னர் காலை 10 மணியளவில் காசி குடும்பத்தினர் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை காசி அதிர்ச்சியானார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் வெளியே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த ஒரு சவரன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசில் காசியின் மனைவி முனியம்மாள் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: