சென்னை,: மீஞ்சூரில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அவசர தேவைக்கு லாரி மூலம் குடிநீர் வழக்க வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நாளை (13ம் தேதி) காலை 6 மணி முதல் வரும் 15ம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.
