சென்னை: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணி நியமனத்துக்காக புவியியல், வரலாறு, இயற்பியல் பாட ஆசிரியர் பணி நியமனத்துக்கு தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களில் நேரடி பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மேற்கண்ட பதவிகளுக்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் ஜூலை 4ம் தேதி வெளியிடப்பட்டது.