சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி பண்டாரிக்கு புதிய பதவி

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற  தற்காலிக தலைமை நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரியை  கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (சேப்மா) தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார். 4 ஆண்டுகளோ அல்லது 70 வயதை எட்டும் வரையிலோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ அவர் இந்த பதவியில் இருப்பார் என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி பண்டாரி கடந்த பிப்ரவரி மாதம்தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் வரும் 13ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அவர் தீர்ப்பாய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: