எங்கிருந்தாலும் ஆலோசனை பெறலாம் கண் நோயாளிகளுக்கு உதவி செய்ய செயலி: டெல்லி எய்ம்ஸ் அறிவிப்பு

புதுடெல்லி: கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை  செய்து கொண்ட நோயாளிகளின் வசதிக்காக புதிய செயலியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கி வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண் நோய் சிகிச்சை பிரிவு தலைவர் டிட்டியால் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் உள்ள கண் நோயாளிகள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக புதிய ஆப் (செயலி) உருவாக்கப்பட்டு வருகிறது. கண் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகளை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் இது உதவும். தொலை துார பகுதிகளில் இருக்கும் நோயாளிகள் எப்பொழுதும்  மருத்துவர்களை நேரில் சந்தித்து பேசுவது கடினம். இதன் மூலம், மருத்துவர்கள் நோயாளிகளுடன் நேரிடியாக கலந்துரையாடலாம். இதில் உள்ள கேமரா உதவியுடன் நோயாளிகள் தங்களுடைய கண்களின் படத்தை அனுப்பி தங்கள் பிரச்னைகள் குறித்து மருத்துவர்களிடம் பேச முடியும்.  இன்னும் 6 மாதத்தில் இந்த ஆப் அறிமுகப்படுத்தப்படும்,’’ என்றார்.

Related Stories: