சிறையில் ராவத்தை சந்திக்க உத்தவுக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி: சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பி.யுமான சஞ்சய் ராவத், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மும்பையில் உள்ள ஆர்தூர் சாலை சிறையில் அவர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், இவரை சிறையில் சந்தித்து பேசுவதற்காக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அனுமதி மறுத்துள்ள சிறை நிர்வாகம், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வரும்படி அவரிடம் கூறியுள்ளது. இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: