சின்னமனூர் பகுதியில் முதல் போகம் நெல் பயிர்கள் தீவிர வளர்ச்சி

சின்னமனூர் : சின்னமனூரில் நான்காயிரம் ஏக்கர் வயல்வெளிகளில் வருடம் இருபோகம் நெல் சாகுபடி விவசா யம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவசாயத்தை காக்கும் விதமாக முல்லைப் பெரியாற்றில் ஜூன் முதல் தே தியில் பாசன நீர் திறக்கப்படுவதால் தொடர்ந்து மேற்படி இரு போகங்களுக்கு துணை நிற்கும் வகையில் நெல் சாகுபடி செய்து 120 நாட்களில் நெற் மணிகளாக அறுவடை செய்து பொதுமக்களுக்கு உணவாக சென்று சேர்க்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக தென்மேற்கு பருவ மழையின் சாரலும் தூரலும் கனமழையும் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஆட்கொண்டு ஆங்காங்கே பெய்து வருகிறது.

இதனால் முல்லைப் பெரியார் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது, தொடர்ந்து திறக்கப்பட்டு கடந்தும் வருகிறது. ஆங்காங்கே குளங்கள் கண்மாய்கள் என சரிசமமாக நிறைந்தும் தேங்கியும் வருகிறது. தொடர்ந்து இம்மழையின் காரணமாக கம்பம் பள்ளத்தாக்கில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டு நெற்க திர்களால் நிற்கும் நிலையில் இந்த ம ழையின் ஊக்கம் மருந்தாக விளங்குவ தால் தற்போது தீவிர வளர்ச்சியில் நெற் பயிர்கள் இருப்பதால் அறுவடையில் அ திக மகசூல் பம்பர் குலுக்களாக இருக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

தொடர்ந்து விவசாய உலகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது இந்த நடபாண்டில் தென்மேற்கு பருவமழையின் சரியான நேரத்தில் பெய்து வருவதால் விவசாயத்திற்கு வளர்ச்சியின் முன்னோட்டமாக இருப்பதால் தற்போது முதல் பகுதியில் அதிகமான உற்பத்தி யுடன் ,இரண்டாம் போகத்திற்கும் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதை காட்டும் விதத்தில் தற்போது பருவ காலநிலை நீடித் திருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: