ஏலகிரி மலையில் உள்ள தொலைநோக்கி இல்லத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்-சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு

ஏலகிரி : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் தொலைநோக்கி இல்லத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளின்  எதிர்க்கின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை  ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலை, பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டைக்கு அருகில் மலையின் உயரத்தில் உள்ளது உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,700 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக தொலைநோக்கி இல்லம் ஒன்று  ஏலகிரி மலையில் நிறுவப்பட்டுள்ளது. இது வனத் துறையினரால் பராமரிக்கப்படுகிறது. பொன்னேரியில் இருந்து ஏலகிரி செல்லும் வழியில் மலைப்பாதையின் நுழைவாயிலில், பதிமூன்றாவது வளைவுக்கு சற்று முன்பாக 1002 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது.  இந்த தொலைநோக்கி சமவெளிகளின் அழகிய தோற்றத்தைக் காட்டுவதற்கு பயன்படுகிறது.

மேலும் பயணிகள் பள்ளத்தாக்கின் அழகு, செங்குத்தான சரிவுகள், ஜோலார்பேட்டை சமவெளி மற்றும் வாணியம்பாடி சமவெளி ஆகியவற்றைக் காண வகை செய்கிறது.

மேலும்  இந்த தொலைநோக்கி இல்லம் வார இறுதியிலும் திறந்திருக்க வேண்டும் என்றாலும் பொதுவாக இது பூட்டியே காணப்படுகிறது.எனவே தொலைநோக்கி இல்லத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: