தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்; எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

பள்ளிப்பட்டு:  தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் பெண் பயனாளிகள் 100 பேருக்கு விலையில்லா ஆடுகளை எம்எல்ஏ சந்திரன் வழங்கினார். இரா.கி.பேட்டை ஒன்றியம் வெடியங்காடு ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஊரக பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் நேற்று வழங்கப்பட்டது. இதில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன்  தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 100 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார்.

கால் நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பழனி. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரகு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சீராளன், ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா, .ஒன்றிய குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள்  சிவக்குமார், நதியா திருஞானம், கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ரா கணேசன், குப்புசாமி, எர்லிஸ்ட்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: