பெரம்பூர்: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜமங்கலம் ரெட்டேரி மேம்பாலம் அருகே கோயம்பேடு முதல் மாதவரம் வரை பணிகள் நடந்து வருகிறது. ரெட்டேரி சந்திப்பு அருகே நேற்றிரவு 11 மணியளவில் 30 வட மாநில பணியாளர்களுடன் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் சரிந்து பாலத்தில் விழுந்தது.