ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி

திருவனந்தபுரம்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பல் விக்ராந்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். கொச்சி கடற்படை காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

ரூ.20,000 கோடியில் கட்டப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பலாகும். மிக்.29கே ரக போர்விமானங்கள் உட்பட 30 போர் விமானங்களை விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கலாம்.

இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே போர்கப்பல்களை தயாரித்து வந்தன. உள்நாட்டிலேயே போர்க்கப்பலை தயாரிக்கும் வரிசையில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்த கப்பலில் பெண் அதிகாரிகள், பெண் அக்னிவீரர்களுக்கான தனித்தனி அறைகள் உள்பட 2,200 அறைகள் உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள் என 1,700-க்கு மேற்பட்டோர் இந்த கப்பலில் பணியாற்ற உள்ளனர்.  

இந்த கப்பலில் உள்ள 4 கியாஸ் விசையாழிகள் மூலம் கப்பலுக்கு தேவையான 88 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ளப்படும். இந்த மின்சாரத்தால் பாதி கொச்சின் மாநகரத்துக்கு ஒளியூட்ட முடியும்.  

இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இந்து சமுத்திரத்தில் இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: