சின்னமனூர் அருகே பாசி படர்ந்துள்ள குளத்தை தூர்வார கோரிக்கை

சின்னமனூர்: சின்னமனூர் அருகே பாசி படர்ந்துள்ள குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னமனூர் அருகே உள்ளது முத்தலாபுரம் ஊராட்சி. இங்கு சுமார் 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பஸ் நிலையம் எதிரே சுமார் 10 ஏக்கர் அளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சென்று தேங்குகிறது.

மேலும் மழைக்காலத்தில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்வதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த கழிவுநீரில் உருவாகும் கொசுக்களால் மக்களுக்கு தொற்றுநாய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வருடக்கணக்கில் தேங்கியுள்ள தண்ணீரால் இந்தக்குளம் பாசிப்படர்ந்துள்ளது. எனவே குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி அதனை தூர்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: