சுவிட்சர்லாந்தில் ஸ்கை டைவ் அடித்த பிரியா பவானி சங்கர்

சென்னை: மேயாதமான் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், யானை, குருதிஆட்டம், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர், தற்போது அகிலன், பொம்மை, ருத்ரன், பத்துதல, இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மன், நாடுகளுக்கு சென்றுவிட்டு தற்போது ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறார்.

அங்கு பிரபலமான ஆல்பஸ் மலை மேல் இருந்து ஸ்கை டைவ் அடித்திருக்கிறார். தனது சுற்றுப் பயண படங்கள் அனுபவங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சுவிட்சர்லாந்தில் ஸ்கை டைவ் அடித்த வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அது வைரலாக பரவியது.

Related Stories: