தொட்டபெட்டா மலை சிகரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கோவை மூதாட்டி; உடலை மீட்கும் பணி தீவிரம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவில் முகாமிற்கு இயற்கை காட்சிகளையும் பள்ளத்தாக்கு பகுதிகளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து பள்ளத்தாக்குகளை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். காட்சி கோபுரத்திற்கு கீழ்ப்பகுதியில் பாறைகள் நிறைந்த ஆபத்தான சரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை பெண் சுற்றுலா பயணி ஒருவர் தாண்டி உச்சியில் இருந்து திடீரென கீழே குதிக்க தயாராகியிருக்கிறார்.

விபரீதத்தை உணர்ந்த சுற்றுலா பயணிகள் நோ நோ எனக் கத்தியுள்ளனர். அதனை பொருட்படுத்தாமல் நொடிப்பொழுதில் பாறையில் இருந்து குறித்துள்ளார். இந்த பதற வைக்கும் காட்சி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.  இதனிடையே தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட விவரம் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து பள்ளத்தாக்கு பகுதியில் கயிறு கட்டி இறங்கி உடலை தேடும் பணியை மேற்கொண்ட போது சுமார் 500 அடி பள்ளத்தில் உடல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலை மேலே கொண்டு வரும் பணிகளில் தீனி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையினர் கூறுகையில், ஊட்டியில் இருந்து ஆட்டோ எடுத்துக் கொண்டு தொட்டபெட்டா சிகரத்திற்கு வந்துள்ளார். பாறைகள் உள்ள பகுதிக்கு சென்ற லீலாவதி தனது கையில் கொண்டு வந்த பையை அங்குள்ள பாறை மீது வைத்துவிட்டு தடுப்பு வேலியைத் தாண்டி சென்று திடிரென குறித்துள்ளார். அவர் கொண்டு வந்திருந்த பையை கைப்பற்றி சோதனையிட்டதில் பையில் ஆதார் அட்டை இருந்தது. அதில் தற்கொலை செய்து கொண்ட பெண் கோவை மாவட்டம், தடாகம் கணுவாய், ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மனைவி லீலாவதி(62) என்பது தெரியவந்துள்ளது. பையில் ரூ.16 ஆயிரத்து 500 பணமும் இருந்தது. என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.

Related Stories: