திருநின்றவூர் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள்; அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்

ஆவடி: திருநின்றவூர் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார். திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் புதிய பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அன்னை இந்திரா நகர் 5, 6, 7வது பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேட்டு நிதியிலிருந்து ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமிபூஜை  நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் நாசர் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநின்றவூர் தலைவர் தி.வை.ரவி, துணை தலைவர் உஷாராணி ரவி, சரளா நாகராஜ், ஆணையர் ரமேஷ், தலைமை ஆசிரியர் லஷ்மிபிரபா, நகர திமுக நிர்வாகிகள் கமலக்கண்ணன், நாகராஜ், ரவி, பாபு, குணசேகரன், நகரமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், தங்கராஜ், சரவணன், சசிகலா, உஷாராணி, சுரேஷ்குமார், கிருஷ்ணன், ஜெயகுமார், சந்தோஷ்குமார், ஸ்ரீதேவி, ராதா அசோக்குமார், சாந்தி பாபு, தேவி, வார்டு செயலாளர்கள் கோட்டீஸ்வரன், அசோக்குமார், சலீம், மோகன கிருஷ்ணன், சுரேஷ், கோபால், மகேஷ்குமார், மாதவன், மேகநாதன், கருணாநிதி, முரளி, பாஸ்கரன், செந்தில்வேல், ரவிச்சந்திரன், சுகுமாரன், ஜீவானந்தம், பாபு, பூமணி இளைஞரணி சுதர்சனம், திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணியை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: