தேர்தல் விதிமீறல் வழக்கு லாலு பிரசாத் விடுவிப்பு

ஹாஜிபூர்: கடந்த 2015ம் ஆண்டில் தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவை விடுவித்து பீகார் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கடந்த 2015ம் ஆண்டு, பீகார் மாநிலம் ரகோபூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ‘இந்த தேர்தல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், உயர் சாதியினருக்கும் இடையே நடக்கும் மோதல்’ என பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஹாஜிபூர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஸ்மிதா ராஜ், குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், லாலு நிரபராதி என தீர்ப்பளித்தார். தீர்ப்பு அறிவிக்கப்படுவதால், லாலு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

Related Stories: