இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான சித்தா, பேரிடர் மேலாண்மை உள்பட 9 புதிய பாடங்கள் அறிமுகம்: அண்ணா பல்கலை அதிகாரிகள் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பெண்கள் மற்றும் பொது ஆய்வுகள் அறிமுகம், இலக்கியத்தின் கூறுகள், திரைப்பட மதிப்பிடல், பேரிடர் மேலாண்மை, ‘யோகா, ஆயுர்வேதம், சித்தா ‘ உள்பட 9 புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றில் 2 பாடங்களை கட்டாயமாக படிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சில செமஸ்டர் மாணவர்களுக்கு புதிய பாடங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இறுதியாண்டு இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு 9 புதிய பாடங்களை அறிமுகம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது.

கட்டாய தலைப்புகளின் கீழ் பெண்கள் மற்றும் பொது ஆய்வுகள் அறிமுகம், இலக்கியத்தின் கூறுகள், திரைப்பட மதிப்பிடல், பேரிடர் மேலாண்மை, ‘யோகா, ஆயுர்வேதம், சித்தா’, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு, இந்தியாவில் மாநில தேசத்தை கட்டியெழுப்பும் அரசியல், தொழில்துறை பாதுகாப்பு, மனித சமுதாயத்திற்கான அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனை ஆகிய 9 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 9 பாடங்களில் 2 பாடங்களை இறுதியாண்டு இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் விருப்பத்தின்படி கட்டாயம் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: