தீவிரவாத வழக்கில் இம்ரானை கைது செய்ய 25ம் தேதி வரை தடை: பாக். நீதிமன்றம் முன்ஜாமீன்

இஸ்லாமாபாத்: தீவிரவாத வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நாளை மறுதினம் வரை கைது செய்ய தடை விதித்து அவருக்கு முன்ஜாமீன் கொடுத்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் காவல்துறை, நீதித்துறை மற்றும் இதர அரசு நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் மீது நேற்று முன் தினம் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி இம்ரான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், இம்ரானுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், வரும் 25 ஆம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: