தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டம் குடும்ப வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு

சென்னை: தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, “தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகம் பேர் பயனடையும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும்” என்றார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: