எங்களையும் அழையுங்கள் இந்தியாவுக்கு தைவான் அரசு வேண்டுகோள்

தைபெய்: சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலில் சேரும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வருவதால், இந்தியாவின் ஆதரவை தைவான் கோரியுள்ளது.

உலக நாடுகள் இடையே காவல்துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்த, ‘இன்டர்போல்’எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 95வது பொதுச்சபை கூட்டம் இம்முறை டெல்லியில் நடைபெறுகிறது. கடந்த 1984ம் ஆண்டு வரையில் இன்டர்போலில் தைவான் இடம்பெற்று இருந்தது. அதன் பிறகு, சீனாவால் அது நீக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால், அந்த நாட்டை சுற்றி வளைத்து சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் ஆதரவுடன் தைவனும் இதற்கு போட்டியாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற நிலையில், டெல்லியில் நடக்கும் இன்டர்போல் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு இந்தியாவின் ஆதரவை தைவான் நாடியுள்ளது. இது குறித்து தைவான் குற்றப் புலனாய்வு ஆணையர்  கூறுகையில்,‘இன்டர்போல் அமைப்பில் தைவான் உறுப்பு நாடாக இல்லை. ஆனால், இதன் பொதுச்சபை கூட்டத்தை இந்தியா நடத்துவதால், எங்களை சிறப்பு பார்வையாளராக அழைப்பதற்கான அதிகாரம் அதற்கு உள்ளது,”என்றார்.

Related Stories: