தமிழகத்தில் ராகுல்காந்தி 4 நாள் நடைபயணம் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ராகுல்காந்தி 4 நாட்கள் நடைபயணம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி தலைமையில் 2வது நாளாக தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். அகில இந்திய காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி நாகர்கோயில், மார்த்தாண்டம், களியக்காவிளை வழியாக கேரள மாநிலம் செல்கிறார்.  இந்த நடை பயணம் குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் 2வது நாளாக நேற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்தது.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகித்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, எம்பிக்கள் ஜோதிமணி, விஜய்வசந்த், ஜெயக்குமார், செல்லக்குமார், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், ஹசன் மவுலானா, ரூபி மனோகரன், துரை சந்திர சேகர், ஊர்வசிஅமிர்தராஜ், மாங்குடி ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தீரர் சத்தியமூர்த்தி மற்றும் முன்னாள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சத்திய மூர்த்தி, மூப்பனார் ஆகியோரின் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ்,  வல்லபிரசாத், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செல்வபெருந்தகை உள்ளிட்ட பலர் தலைவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்துவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: