சில்லி பாயின்ட்...

* ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் கோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பகான் அணிகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பிபா மற்றும் ஏஎப்சி நிர்வாகத்திடம் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்தில் நடக்கும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வந்த இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகியூஸ், மணிக்கட்டு காயம் காரணமாக விலகியுள்ளார்.

* அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பதவிக்கு போட்டியிட இந்திய அணி முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

* ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் களமிறங்க உள்ள வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் ஸ்ரீ தரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஐரோப்பிய மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரில் களமிறங்கும் முதல் இந்தியர் என்ற பெருமை மனிஷா கல்யாணுக்கு கிடைத்துள்ளது (20 வயது). அவர் ‘அப்போலான் லேடீஸ்’ அணிக்காக விளையாட உள்ளார்.

Related Stories: