சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு

குடகு: கர்நாடகாவில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குடகு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று  சென்று பார்வையிட்டார். அப்போது, சாவர்க்கரை பற்றி சித்தராமையா அவதூறாக பேசியதாக கூறி, பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

சிலர் அவருடைய கார் மீது முட்டையை வீசினர். போலீசார் அவர்களை விரட்டினர். இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரசாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: