குஜராத் கொலை குற்றவாளிகள் முன்விடுதலை உத்தரவை திரும்ப பெற வேண்டும்: வைகோ கண்டனம்

சென்னை: குஜராத் கொலை குற்றவாளிகள் முன்விடுதலை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, 11 பேரை வெட்டிக் கொன்ற கொலையாளிகளை 75வது விடுதலை நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி குஜராத் மாநில பாஜ அரசு முன் விடுதலை செய்திருந்தது. இது மன்னிக்கவே முடியாத செயலாகும். இது ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதி. குஜராத் கொலைக் குற்றவாளிகள் முன்விடுதலை கடும் கண்டனத்திற்குரியது. குஜராத் மாநில அரசு தமது உத்தரவை திரும்பப் பெற வேண்டும். வன்முறை நடத்திய கொலையாளிகளை மீண்டும் சிறையில் தள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: