புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வாஸ்கோ மற்றும் fite n fusta  ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து PONDY FOOD FETE 2022 என்ற நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பழைய துறைமுக வளாகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் மது பிரியர்களை குதூகலப்படுத்தும் விதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒயின் வகைகள் இடம்பெறவுள்ளன.

வார இறுதி நாட்கள் என்பதால் உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் கலந்துக் கொள்வார்கள் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் தெரிவித்திருக்கிறார். திருவிழாவில் புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல்கள் கலந்துக்கொண்டு விதவிதமான உணவுகளை விருந்து படைக்க உள்ளனர். மேலும் இசைக் கச்சேரி, மேஜிக் ஷோ, விளையாட்டு நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

Related Stories: