செங்கல்பட்டு வித்யாசாகர் பள்ளியில் முன்னாள் ராணுவ அதிகாரி தேசிய கொடியேற்றினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், முன்னாள் ராணுவ அதிகாரி பங்கேற்று தேசிய கொடியினை ஏற்றினர். செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி வளாகத்தில் 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில், வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார்.  வித்யாசாகர் பெண்கள் கல்லூரி முதல்வர் முனைவர் ஷாலினி குளோபல்,   பள்ளி முதல்வர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஒய்வு பெற்ற இந்திய ராணுவ விமானப்படை அதிகாரி எஸ்.சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மாணவ, மாணவியர்களின்  கலை நிகழ்ச்சிகளை ராணுவ அதிகாரி கண்டு ரசித்தார். பின்னர், மாணவர்களிடையே நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களைச் வழங்கினார். பின்பு, மாணவர்கள் வரைந்த ஓவியக்கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இறுதியாக, வித்யாசாகர் கல்விக்குழுமத்தின் எம்பவர்மென்ட் முதல்வர் மாரிச்சாமி நன்றி கூறினார்.

Related Stories: