3.5 கிமீ நீளமுள்ள சரக்கு ரயில் சூப்பர் வாசுகியின் சோதனை வெற்றி: 27,00 டன் நிலக்கரியுடன் பயணம்

புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயிலான ‘சூப்பர் வாசுகி’யில், 27,000 டன் நிலக்கரியுடன் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சட்டீஸ்கர் மாநிலத்தின் கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள ராஜ்நந்த்காவ் இடையே 295 வேகன்களில் 27,000 டன் நிலக்கரியை ஏற்றி கொண்டு 3.5 கிமீ நீளமுள்ள ‘சூப்பர் வாசுகி’ சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ரயில் கோர்பாவில் இருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு, 267 கிமீ தூரத்தில் உள்ள ராஜ்நந்த்காவை சென்றடைய மறுநாள் நண்பகல் 11.20 மணியானது. இந்திய ரயில்வேவால் இதுவரை இயக்கப்பட்ட மிக நீளமான, கனமான சரக்கு ரயில் இதுவாகும். இந்த ரயில் ஒரு நிலையத்தை கடக்க 4 நிமிடங்களாகும். ‘சூப்பர் வாசுகி’ எடுத்துச் செல்லும் நிலக்கரியின் மூலம், ஒருநாள் முழுவதும் 3,000 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யலாம். 5 சரக்கு ரயில்களை ஒரே ரயிலாக இணைத்து இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: