பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது

தருமபுரி: தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில், பாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது செய்ப்பட்டுள்ளார். 11ம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்ததாக கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேரை கைது செய்தனர். ராசிபுரத்தில் உள்ள கே.பி. ராமலிங்கத்தின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

பாப்பாரப்பட்டியில்  கடந்த 11ம் தேதி  நடந்த 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா பாதயாத்திரையை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம்  துவங்கி வைத்து பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர். இதை தொடர்ந்து  தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா ஆலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர்.

அப்போது,  பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில் அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும் படி வலியுறுத்தினர். கண்காணிப்பாளர் மறுத்ததால்  ‘எங்களுக்கே அனுமதியில்லையா’ என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. பி. ராமலிங்கம், பாரதமாதா நினைவாலயத்தில் உள்ள கதவை பூட்டப்பட்டிருந்த பூட்டை கல்லால் உடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அத்து மீறி பாரதாமதா சிலைக்கு மாலை அணிவித்ததாக கூறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அவரது இல்லத்தில் கே.பி.ராமலிங்கம் பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்ததாக 50-க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் கே.பி.ராமலிங்கத்தை அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: