முதல்வருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி: அர்ச்சகர் சட்டம் நிறைவேற்றி ஓராண்டு நிறைவு

சென்னை: அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவு அடைவதையொட்டி அர்ச்சகர் நியமனத்திற்கு பெரும் முயற்சி எடுத்த கலைஞர் மற்றும் அர்ச்சகர் பணி நியமனம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றி ஈறாயிரம் ஆண்டு கருவறைத் தீண்டாமை இருள் அகற்றப்பட்ட ஆகஸ்ட் 14,2021 இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் என்று புகழாரம் சூட்டியுள்ளது. பல்லாயிரம் ஆண்டு தமிழக வரலாற்றில் சமத்துவம சமூக நீதியை மையப்படுத்தி கடந்த 50 ஆண்டுகால திராவிட  இயக்க ஆட்சிதான் மகத்தானது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நாளில் அர்ச்சகர் நியமனத்திற்க்காக பெரும் முயற்சி எடுத்த கலைஞரையும் ஓராண்டிற்கு முன்பு இந்நாளில் அர்ச்சகர் பணி நியமனம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: