தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரத்து 260 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.440 கோடியே 53 லட்சத்து 78,514 பைசல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று லோக் அதாலத் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் 439 அமர்வுகளில் இந்த லோக் அதாலத் நடந்தது. இதில் செக் மோசடி வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், எளிதில் தீர்த்து வைக்கக்கூடிய சிவில் மற்றும் தொழிலாளர் தொடர்பான வழக்குகள், குடும்பநல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள்  விசாரிக்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் மட்டும் 412 செக் மோசடி வழக்குகள், 1965 வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் உள்ளிட்ட 78 ஆயிரத்து 260 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.440 கோடியே 53 லட்சத்து 78,514 பைசல் செய்யப்பட்டது.

Related Stories: