மாணவி மரண வழக்கு பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணி ஸ்ரீமதி மர்ம மரணம் அடைந்தார். இவ்வழக்கில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகிய 5 பேரை சிறையில் உள்ளனர். இதனிடையே, சேலம் சிறையில் உள்ள 5 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து விழுப்புரம் கோர்ட் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த விசாரணையில் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: