தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர், குருக்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் சங்கம் சார்பில் பட்டியலின கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க கோரியும், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பக்கோரியும், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமை வகித்தார்.

மறைமாவட்ட போதகர்கள் ஏசு அந்தோணி, மைக்கேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பாரதிஅண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லைசத்யா, தமிழர்நல பேரியக்க இயக்குனர் களஞ்சியம், பேராசிரியர் செம்மலர், செங்கல்பட்டு மறைமாவட்ட கத்தோலிக்க பேராய செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டு தலித்கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தினர்.

Related Stories: