கனியாமூர் பள்ளி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் கோரிய மனு: 18-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் ஜாமீன் கோரிய மனு அளித்துள்ளனர். ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 18-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார். தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் 2 ஆசிரியர்கள் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி விசாரணை ஒத்திவைத்தார்.

Related Stories: