எடையூரில் பழுதடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்-பெற்றோர் கோரிக்கை

முத்துப்பேட்டை : எடையூரில் பழுதடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத இரண்டு வகுப்பறை கொண்ட மிகவும் பழமையான ஓட்டு கட்டிடம் ஒன்று பழுதடைந்த நிலையில் உள்ளது.

இந்த பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல வருடமாக பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் இந்த கட்டிடம் நாளடைவில் பொழிவு இழந்தது எந்தநேரத்திலும் கட்டிடத்தில் பல பகுதி பாகங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இப்பகுதியில் தான் மாணவர்கள் விளையாடி வருகின்றனர். ஓய்வான நேரத்தில் இங்கு வந்து அமர்ந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: