சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நேற்று  நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணி  நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் புவனேவருக்கு சுமார் 70கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து சத்தீஷ்கர் மாநிலம் அருகே நாளை 10.08.2022 வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை குறியீடு -1 (Distant Cautionary Signal No. 1) ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories: