காஞ்சிபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்; எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எழிலரசன் எம்எல்ஏ  வழங்கினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும், மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி கற்கவும், உடல்நிலை மேம்பட ஏதுவாக விலையில்லா  சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்.

நேற்று காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அந்திரசன் பள்ளியில் 456 மாணவர்களுக்கும், தாமல்வார் தெரு பகுதியில் அமைந்துள்ள மரியா அக்ஸிலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 159 மாணவிகளுக்கும், எஸ்எஸ்கேவி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 292 மாணவிகளுக்கும் மொத்தம் 907 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி ், காஞ்சி  திமுக நகர செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு, சுரேஷ் கமலக்கண்ணன், நிர்மலா பகுதி  செயலாளர்கள் தசரதன், திலகர் உள்ளிட்ட ஆசிரியர்கள்  பங்கேற்றனர்.

Related Stories: