பொதுப்பணித்துறை நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த சென்னை மண்டல தலைமை பொறியாளர் பதவி உருவாகிறது

சென்னை: பொதுப்பணித்துறை நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிதாக சென்னை மண்டல தலைமை பொறியாளர் பதவி உருவாக்கப்படுகிறது. பொதுப்பணித்துறையின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவது மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பணிகள் நடந்து வருகிறது. எனவே பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவை நிர்வாக ரீதியாக வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கட்டுமானப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் தலைமையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை மண்டல தலைமை பொறியாளர்கள் மேற்பார்வையில் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் மாநில முழுவதும் நடைபெறும் பணியில் கண்காணிப்பில் என்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.

எனவே இந்த நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த புதிதாக வட்டம், கோட்டம் உருவாக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் என்கிற புதிய பதவி உருவாக்கப்படுகிறது. அதன் கீழ் 10 மாவட்டங்கள் உள்ளடக்கி 17 கோட்டங்களாகிறது. புதிதாக திருவண்ணாமலை வட்டம், சென்னை கட்டுமானம்1மற்றும் சென்னை கட்டுமானம் 2, கட்டிட பராமரிப்புக் கோட்டம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி கட்டுமான பராமரிப்பு கோட்டம், வேலூர் திருவண்ணாமலை மின் கோட்டம், திருச்சி மண்டலத்தில் 9 மாவட்டங்களை உள்ளடக்கி 11 கோட்டங்களாகிறது. புதிதாக திருவாரூர் வட்டம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை கோட்டம், திருச்சி, திருவாரூர் மின்கோட்டம், கோவை மண்டலத்தில் 9 மாவட்டத்தை உள்ளடக்கி 11 கோட்டங்களாகிறது. புதிதாக ஈரோடு வட்டம், ஊட்டி கட்டுமான பிரிவு கோட்டம், கோவை மின்கோட்டம், மதுரை மண்டலத்தில் 10 மாவட்டங்களை உள்ளடக்கி 13 கோட்டங்களாகிறது. புதிதாக சிவகங்கை வட்டம், மதுரை கட்டுமான கோட்டம் மதுரை கட்டுமான பராமரிப்பு  பிரிவு, தேனி,தென்காசி கோட்டம், நெல்லை மின் கோட்டம் ஆகியவை உருவாக்கப்படுகிறது.

Related Stories: