எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று காலை 9.18 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி கண்காணிப்பிற்கு இஒஎஸ்-02 என்ற செயற்கை கோள் மற்றும் கிராமப்புற மாணவிகள் உருவாக்கிய அசாதி சாட் செயற்கோள் ஆகியவற்றுடன் எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என்று இஸ்ரோ தெரிவித்தது. விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து முதல், 2-வது, 3-வது நிலைகளை ராக்கெட் வெற்றிகரமாக கடந்ததாகவும் ஆனால் இறுதி கட்டத்தில் செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டை மீண்டும் தொடர்புகொள்ளும் முயற்சிகளும், சிக்னலை மீண்டும் உறுதி செய்யும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.வி டி1 சிறிய ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.

எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட்டில் ஏவிய இஓஎஸ்-02, ஆசாதி சாட் செயற்கைக் கோள்களை விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. இதனால் இந்த 2 செயற்கைக்கோள்களையும் பயன்படுத்த முடியாது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Stories: