ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரோடு போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழாட்சி, தமிழர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனவும் எத்தனை படையெடுப்புகள் வந்தபோதிலும் தமிழ்மொழி தன்னை காத்துள்ளது, தமிழகத்தையும் காத்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  

மேலும் அண்ணா கூறியது போன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது அமைக்க வேண்டும் எனவும் சிந்தனையை வளர்த்துக்கொள்ள அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் எனவும் காணொளி வாயிலாக முதல்வர் பேசினார்.

மேலும் இந்த புத்தகத் திருவிழாவிற்கு 1,500 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். எண்களின் உயிரோடு கலந்த ஊர் ஈரோடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளியில் உரையாற்றினார்.

Related Stories: