வால்பாறையில் கன மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை-ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: சாலையில் விழுந்தது ராட்சத பாறை

வால்பாறை : வால்பாறையில் கன மழை பெய்வதால் பள்ளிகளுக்க இன்று 1 நாள் விடுமுறை விடப்டப்டுள்ளது. மழைக்கு ராட்சத பாறை சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குரத்து பாதித்தது. ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.. வால்பாறையில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவ மழை பெய்துவரும் நிலையில் கடந்த 3 நாட்களாக கன மழை நீடிக்கிறது.

எனவே நேற்று பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. சோலையார் அணை நீர் மட்டம் 160 அடிக்கு மேல் இருந்த நிலையியல், உபரி நீர் பரம்பிக்குளம் அணைக்கு சேடல் பகுதியில் வழிந்து சென்ற வண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை நீர் வரத்து அதிகரித்ததால் அணை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு கேரளாவிற்கு நீர் விடுவிக்கப்படுகிறது. சுமார் 1000 கன அடிநீர் வெளியேறுகிறது. பரம்பிக்குளம் அணைக்கு 4200 கன அடி நீர் சேடலில் வழிந்து செல்கிறது. தொடர்ந்து அணையின் நீர் மட்டம் 162 அடியாக நீடிக்கிறது.

மேலும் நடுமலை ஆறு, சோலையாறு, கூழாங்கல் ஆறு, வாழைத்தோட்டம் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தால் பொதுமக்கள் ஆற்று நீரை பயன்படுத்த வால்பாறை தாசில்தார் விஜயகுமார் தடை விதித்து உள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வால்பாறை பகுதியில் இடைவிடாது அடை மழை பெய்து வருகிறது. 24 மணி நேரமும் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய மழைய நீடித்து, விடிய விடிய பெய்தது.

தொடர் மழையால் காரணமாக நேற்று அதிகாலை 2 மணி அளவில் வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குள் தண்ணீர் புகுந்தது. சமீபத்தில் வாழைத்தோட்டம் ஆறு 3 கிமீ. துாரத்திற்கு துார் வாரப்பட்ட தால் ஆற்று நீர் உடனடியாக வழிந்ததால், பாதிப்புகள் ஏற்படவில்லை.

இருப்பினும் அதிகாலை 2 மணி அளவில் வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் சில தெருக்களில் ஆற்று நீர் புகுந்து வடிந்துள்ளது. சம்பவம் அறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் பல்வேறு இடங்களில் சிறிய மண்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில்  வால்பாறை பொள்ளாச்சி சாலையில் ராட்சத பாறை, மண்சரிவுடன் சாலையில் சரிந்து விழுந்துள்ளது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக கவனத்துடன் வாகனத்தை மலைப்பாதைகளில் இயக்கவேண்டும் என தாசில்தார் வேண்டுகோள்விடுத்து உள்ளார்.இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக வால்பாறையில் 12.2 செமீ. மழை பதிவாகி உள்ளது. வால்பாறைறை அடுத்த சின்னக்கல்லாரில் 14.2 செமீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வால்பாறை டவுனில் தாசில்தார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு மழை பாதிப்புகள் மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று 3 வது நாளாக வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கன மழை நீடிப்பதால் இன்று (5ம் தேதி) மேலும் ஒரு நாள் விடுமுறையை அறிவித்து கலெக்டர் சமீரன் நேற்று இரவு உத்தரவிட்டார்.

மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின் பேரில் திமுக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தனர். நகர செயலாளர் சுதாகர் தலைமையில் சென்ற துணைத் தலைவர் செந்தில் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: