சேலத்தில் யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக 2 பேர் கைது: ஆயுதம் ஏந்தி போராட திட்டம்

சேலம்: சேலத்தில் யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட 2 பேர் ஆயுதம் ஏந்தி போராட திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. 2 இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி போராட திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ முதல் தகவல் அறிக்கையில் வெளியாகியிருக்கிறது. சேலம் பிச்சிபாளையத்தைச் சேர்ந்த நவீன் அதைப்போல சஞ்சய் பிரகாஷ் ஆகிய 2 பேர் மீது  என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக முதல் கட்டமாக ஓமலூர் போலீசார் அவர்களை கைது செய்தார்கள். கைது செய்து அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை நடத்திய போது துப்பாக்கி தயாரிப்பதற்கான அனைத்து கருவிகளையும் அதைப்போல வெடி மருந்துகளையும் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த வழக்கு க்யூ பிரிவு போலீசாருக்கு மாற்றப்படுகிறது. க்யூ பிரிவு போலீசாருக்கு பிறகு இந்த வழக்கு என்ஐஏ பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. என்ஐஏ அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆயுத தடைச்சட்டம் மற்றும் வெடிப்பொருள் தடைச்சட்டம் என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சஞ்சய், நவீன் இரண்டு பேரையும் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை போன்று இவர்களும் ஒரு அமைப்பை உருவாக்கி ஆயுதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனை முதல் தகவல் அறிக்கையில் என்ஐஏ அதிகாரிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் பின்னனியில் இருப்பவர்கள் யார் என்ற கோணத்தில் அடுத்த கட்ட விசாரணையில் என்ஐஏ அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள். 2 பேர் மட்டுமே கைதான நிலையில் இவர்களுக்கு வெடிப்பொருள் மற்றும் துப்பாக்கி தயாரிப்பதற்கான இந்த திட்டத்தை வகுத்து கொடுத்தவர்கள் யார் என்று அடுத்த கட்ட விசாரணையில் என்ஐஏ அதிகாரிகள் இற்ங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் 2 பேருடைய செல்போன்களும் சைபர் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் கைதாவதற்கு முன்பாக யாரிடமெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பின்பு இவர்களது சமூக வலைதள பக்கங்களையும் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: