அமைச்சர் எ.வ.வேலுவுடன் நார்வே நாட்டு தூதுக்குழுவினர் சந்திப்பு

சென்னை: நார்வே நாட்டுத் தூதுக்குழுவினர் திரு.கிறிஸ்டியன் ஆர்.வி.கார்ட்டர் தலைமையில் இன்று (4.8.2022) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை திரு.எ.வ.வேலு அவர்களை சந்தித்து சிறு துறைமுகங்கள் துறை தொடர்பாக விவாதித்தனர். பசுமை கடல், கடல்வழி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடலோர கப்பல் போக்குவரத்து, LNG அடிப்படையிலான கப்பல் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மேலாண்மை ஆகியவை குறித்து விவாதித்தார்கள். அமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்கள். தமிழ்நாட்டில் நவீன புதிய துறைமுகங்கள் அமைப்பது தொடர்பாகவும், கடல்வழி புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பதாகவும் நார்வே நாட்டு தூதுக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக அமைச்சர் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, நார்வே நாட்டு மூத்த சந்தை ஆலோசகர்கள் திருமதி.ஆர்த்தி குமார் பாட்டியா, திரு.ஆஷிஷ் அகர்வால், வணிக ஆலோசகர் திருமதி.மோனிகா வால்டெஸ் கார்ட்டர் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப., தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் திரு.எஸ்.நடராஜன் இ.ஆ.ப., மாநில துறைமுக அலுவலர் திரு.எம்.அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்றனர்.

Related Stories: