உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். உக்ரைன் நாட்டில் படிக்க இந்திய மாணவர்கள் 1387 பேர் இந்திய வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுள்ளனர். அதில் ரூ.133 கோடி நிலுவை இருப்பதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சூழலில் மாணவர்களால் எப்படி கல்வி கடனை செலுத்த முடியும். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்திய மாணவர்களை இந்தியாவிலேயே படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அந்த மாணவர்கள் படிப்பை இங்கேயே தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: