தமிழக கிராமப்புற சாலைகளுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசிடம் அமைச்சர் பெரியகருப்பன் கோரிக்கை

புதுடெல்லி: ‘தமிழகத்தில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4 ஆயிரம் நிதி ஒதுக்கும்படி ஒன்றிய அமைச்சரிடம் தமிழக ஊரகத் வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். அரசு முறை பயணமாக டெல்லி வந்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்தார். அப்போது, தமிழக நலன் சார்ந்த  கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர், பெரிய கருப்பன் அளித்த பேட்டி வருமாறு: கடந்த ஆட்சியாளர்கள் கிடப்பில் வைத்திருந்த பல முக்கிய பணிகளை தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முடித்தது குறித்து தெரிவித்தோம். அந்த வகையில், கடந்த ஆண்டு தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், கடந்த அதிமுக ஆட்சியில் முடிக்கப்படாத இருந்த பணிகளையும் சேர்த்து மொத்தம் ரூ.20,921 கோடி அளவில்  தொகையை பெற்றது மட்டுமின்றி, அதுசார்ந்த அனைத்து பணிகளும் முடித்து  வருகிறோம் என்று கூறினோம். இதை ஒன்றிய அமைச்சர் பாராட்டினார்.

1.5 லட்சம் கிமீ நீளமுள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும்படி கோரினோம். கடலோர மாவட்டங்களில் மலைவாழ் மக்கள் வசிப்பட பகுதிகளில் பிரதான தேவையாக இருப்பது சமுதாயக் கூடங்கள். அதனை தமிழகத்தில் முன் மாதிரியாக எடுத்து பணிகளை செய்திட வேண்டும் என்று மனுவாக கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தமிழக கிராமப்புற சாலைகளுக்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதனை உடனடியாக  பரிசீலனை செய்வதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: